close
Choose your channels

ஜோதிகாவின் ரீமேக் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டாரின் மகள்

Saturday, March 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த துமாரி சூலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை லட்சுமிமஞ்சு இணைந்துள்ளர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துமாரி சூளு படத்தில் நேஹா தூபியா நடித்த எப்.எம் வானொலியின் உயரதிகாரி கேரக்டரில் லட்சுமி மஞ்சு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவர் கேரக்டரில் நடிப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. '36 வயதினிலே' படத்தில் ரகுமானும், மகளிர் மட்டும் படத்தில் மாதவனும், நாச்சியார் படத்தில் டாக்டர் குருஷங்கரும் ஜோதிகா கணவர் கேரக்டரில் நடித்த நிலையில் இந்த படத்தில் நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். துமாரி சூலு' படத்தில் வித்யாபாலனின் கணவராக மனவ் கால் என்பவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment