'ரெமோ' படத்தின் ரீமேக்கா? பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் குழப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தில் அவர் ஆண், பெண் என இரண்டு கெட்டப்புகளில் நடித்த நிலையில் தற்போது பிரபல நடிகர் நடித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதேபோன்று காட்சி இருப்பதை பார்த்து இந்த படம் ’ரெமோ’ படத்தின் ரீமேக் படமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிப்பில் உருவாகியுள்ள ’லைலா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் கிட்டத்தட்ட ’ரெமோ’ படத்தின் சிவகார்த்திகேயன் கெட்டப் போல் இருப்பதால் ரசிகர்கள் அந்த படத்தின் ரீமேக் படமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
’லைலா’ படத்தின் முதல் போஸ்டரில் இருந்து விஸ்வக் சென் பெண் கதாபாத்திரம் மற்றும் ஆண் கதாபாத்திரம் ஆகிய இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தில் ஆகன்ஷா ஷர்மா என்பவர் நாயகி ஆக நடித்திருக்கும் நிலையில் இந்த படம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் நாராயணன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ’ரெமோ’ படத்தின் போஸ்டர் போலவே இருக்கிறது என்று சிலரும் இன்னும் சிலர் ஹிந்தியில் வெளியான ’ட்ரீம் கேர்ள்’ படத்தின் ரீமேக் போல் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படம் நல்ல ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் தெலுங்கு உரிமை குறித்த எந்த செய்தியும் வராத நிலையில் திடீரென அதே டைப்பில் ஒரு படம் தெலுங்கில் உருவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments