சூர்யாவுடன் பிதாமகன் படப்பிடிப்பு: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட லைலா!
- IndiaGlitz, [Sunday,March 21 2021]
தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ’பிதாமகன்’. இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லைலா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகை லைலா தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி படமாக்கப்பட்டது குறித்து கூறிய லைகா, இந்த காட்சிகளின் படப்பிடிப்பு தேனி அருகே உள்ள 2 ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்றும், கிட்டத்தட்ட பத்து நாட்கள் இந்த படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டேன் அந்த பத்து நாட்களும் எனது மறக்க முடியாத நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தேனி பகுதியை எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்று கூறியுள்ளார். இந்த காட்சியின் வீடியோவையும் லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்காகத்தான் நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது