'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகருடன் டூயட் பாடும் லைலா.. க்யூட் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,December 14 2022]

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகருடன் நடிகை லைலா டூயட் பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக லைலா இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கேப் விட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’வதந்தி’ என்ற வெப்தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.

எஸ்.ஜே. சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்த ’வதந்தி’ தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த குமரன் தங்கராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் மற்றும் லைலா ஆகிய இருவரும் இணைந்து டூயட் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ லைலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

பிரபுதேவா நடித்த ’அள்ளித்தந்த வானம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்ணாலே மியா மி’யா என்ற பாடலுக்கு குமரன் மற்றும் லைலா இணைந்து க்யூட்டாக டூயட் நடனமாடி உள்ள வீடியோ தற்போது லைக்ஸ்களை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.