பெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வரும் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு பல முறை அழைத்தும் அவர் வராததால் விசாரணை இல்லாமலே குற்றவாளியாக கருதி விசாரணை செய்ய லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதற்கு முன்பே ஹமீஸா முக்தர் எனும் பெண் பாபர் ஆசம் மீது வழக்குத் தொடுத்து இருந்தார். அந்த வழக்கில் ஆசம் தன்னை துப்புறுத்தினார் என்றும் தன்னைச் சுரண்டலுக்கு ஆளாக்கினார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ஆசம் இல்லாததால் அந்த வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. பின்பு தென்ஆப்பிரிக்காவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. மேலும் அங்கு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் வீரர்கள் அங்கேயே தங்கிவிட்டனர்.

இதனால் ஹமீஸா தொடுத்த வழக்கில் சிறுது அவகாசம் வேண்டும் என்று ஆசம் சார்பாக தடை மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மீண்டும் ஹமீஸா தொடுத்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஆசம் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று மீண்டும் ஒரு வழக்கை லாகூர் நீதிமன்றத்தில் ஹமீஸா தொடுத்துள்ளார்.

இதுகுறித்து சம்மன் மனுவையும் லாகூர் நீதிமன்றம் ஆசத்துக்கு அனுப்பி வைத்து இருந்தது. ஆனால் ஆசம் இநத் விசாரணைக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விசாரணைக்குச் செல்லாத பாபர் ஆசத்தை குற்றவாளியாக கருதி விசாரணைக்கு உட்படுத்துமாறு அந்நாட்டு பெடரல் முகமைக்கு லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பாபர் ஆசம் கடும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு வழக்கில் ஆசம் மாட்டிக் கொண்டு விட்டாரே என ரசிகர்களும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.