மோடிக்கு சவால் விடும் லேடி...! சபாஷ் சரியான போட்டி....!
- IndiaGlitz, [Wednesday,April 14 2021]
மாத்துவா சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என மோடி கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு நான் விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியிருக்கிறார்.
சமீபத்தில் மதம் குறித்து தேர்தல் பிரச்சாரங்கள் செய்ததால், மம்தா-வை 24 மணிநேரத்திற்கு பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் பராசாத் பகுதியில் தனியொருவராக போராட்டத்தில் ஈடுபட்டார். கலைகளில் ஈடுபாடுள்ள மம்தா வண்ண ஓவியங்களை வரைந்து அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
8 கட்டங்களாக மேற்குவங்க தேர்தல் நடைபெற்றுவருகிறது. தேர்தல் பரப்புரைக்காக பேசிய பிரதமர் மோடி அவர்கள் மம்தா மாத்துவா சமூகம் போன்ற சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் மத்திய அரசு நிறைய செய்துள்ளது, தான் செய்ததை நிரூபிக்க மம்தா தயாரா என மோடி சவால் விட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மம்தா கூறியதாவது,
மோடி கூறியதை நான் ஏற்கிறேன், அப்படி நான் சிறுபான்மையினருக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்றால், அரசியலை விட்டு விலகத்தயாராக உள்ளேன். ஆனால் மோடி கூறுவது தவறு என்றால், அவர் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இத்தனை வருடங்களில் இல்லாமல், இம்முறை மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு செய்யும் இடங்களிலும் மோடி அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்.இதை ஏன் தேர்தல் ஆணையம் தடுப்பதில்லை..? மோடி பொய் கூறி, மக்களை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றார். நான் தேர்தலன்று அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்ய தயார் என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.