பிரபல தெலுங்கு இயக்குனரின் 'ருத்ராக்ஷா'வில் நயன்தாரா?

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெயருக்கேற்றவாறு வசூலிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான 'தனி ஒருவன்', 'மாயா' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகி தயாரிப்பாளர்களுக்கும் பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.

குறிப்பாக 'மாயா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நயன்தாராவின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'நானும் ரெளடிதான்' மற்றும் 'இது நம்ம ஆளு' அவருக்கு மேலும் வெற்றிப்படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நயன்தாரா 'திருநாள்', 'காஷ்மோரா', ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணவம்சி அவர்களின் கனவுப்படமாக விளங்கவுள்ள இந்த படத்திற்கு 'ருத்ராக்ஷா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என கிருஷ்ணவம்சி கருதுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜீத். பிரபல தயாரிப்பாளர் கருத்து

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என பல ஊடகங்கள் அவ்வப்போது பல கருத்துக்கணிப்புகள் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்...

விஜய்யின் 'புலி'யுடன் இணைந்த விக்ரமின் '10 எண்றதுக்குள்ள'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இன்னும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய ...

'வல்லவனுக்கு வல்லவன்' ஆக மாறும் 'அசால்ட் சேது'?

ஜிகர்தண்டா' படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா, தற்போது அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார்....

விஜய்யின் நீலக்கண் ரகசியம். இதுவரை வெளிவராத 'புலி' தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும்...

விஜய்தான் மாஸ். இதற்கு ஆப்ஷனே தேவையில்லை. ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், நேற்று குஷ்பு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்......