close
Choose your channels

பிரபல தெலுங்கு இயக்குனரின் 'ருத்ராக்ஷா'வில் நயன்தாரா?

Monday, September 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெயருக்கேற்றவாறு வசூலிலும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான 'தனி ஒருவன்', 'மாயா' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகி தயாரிப்பாளர்களுக்கும் பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.

குறிப்பாக 'மாயா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நயன்தாராவின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'நானும் ரெளடிதான்' மற்றும் 'இது நம்ம ஆளு' அவருக்கு மேலும் வெற்றிப்படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நயன்தாரா 'திருநாள்', 'காஷ்மோரா', ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணவம்சி அவர்களின் கனவுப்படமாக விளங்கவுள்ள இந்த படத்திற்கு 'ருத்ராக்ஷா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என கிருஷ்ணவம்சி கருதுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment