கோலிவுட் ஹீரோயிஸத்தை உடைத்ததா 'மாயா'?

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

கோலிவுட் திரையுலகம் என்றாலே ஹீரோயிஸம் அதிகம் உள்ள துறை என்றுதான் கூறப்படுவதுண்டு. பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோயின் பாடல்களுக்கும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுவதுண்டு. அதுவும் பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஹீரோயின் பெயரளவுக்குத்தான் இருப்பார். இருப்பினும் அவ்வப்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவந்து வெற்றி பெறுவதுண்டு. இதற்கு சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் '36 வயதினிலே' படத்தை ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' ரிலீஸ் ஆனது. பெயருக்கு தகுந்தவாறு வசூலிலும் இந்த படம் சூப்பர் ஸ்டார் என்பது வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதில் இருந்தே தெரியவந்துள்ளது. கோலிவுட் திரையுலகில் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே நல்ல ஓப்பனிங் இருக்கும் என்ற விதிமுறையை '36 வயதினிலே' மற்றும் 'மாயா' ஆகிய இரு படங்கள் உடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'மாயா' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் பெரிய ஸ்க்ரீன்களை 'மாயா' ஆக்கிரமித்துள்ளது. அனேகமாக விஜய்யின் 'புலி' ரிலீஸ் ஆகும் வரை இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.