நயன்தாரா அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ.. செம்ம டைட்டில்..!

  • IndiaGlitz, [Monday,September 18 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெயம் ரவி உடன் நடித்த ’இறைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல யூடியூபர் Dude விக்கி என்பவர் இயக்கத்தில், நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மண்ணாங்கட்டி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான் உள்ளிட்ட பல நடிக்கின்றனர். சீன் ரோல்டன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜசேகர் ஒளிப்பதிவில், மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.