close
Choose your channels

பிரபல யூடியூபர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. பூஜையுடன் படப்பிடிப்பு..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 5 திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டும் அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ’ஜவான்’ மற்றும் ’இறைவன்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் 75வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அவருடைய 76 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Dude Vicky என்ற யூடியூப் பிரபலத்தின் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் 14ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அதன் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் என்றும் கூறப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவமான கேரக்டரில் நயன்தாரா நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் கலைஞர்களின் தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment