இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ரகசியம்: விஜய்டிவி டிடி பேட்டியில் நயன்தாரா!

இதுவரை தான் யாரிடமும் சொல்லாத ரகசியம், ரொம்ப ரகசியம் என விஜய் டிவியில் டிடி எடுத்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளது என்ன? என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை எந்த சேனலுக்கு பேட்டி கொடுப்பது இல்லை என்பதும் அது மட்டுமின்றி எந்த படத்தின் புரமோஷன்களுக்கும் வர மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று வெளியான நிலையில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்

இந்த பேட்டியை எடுத்துள்ள டிடி பல சுவாரசியமான கேள்விகளை கேட்டார் என்பதும் குறிப்பாக நயன்தாரா கையில் உள்ள மோதிரம் குறித்து கேட்ட கேள்விக்கு நயன்தாரா தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று கூறிய வீடியோவையும் கடந்த வாரம் பார்த்தோம். இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வந்துள்ள நிலையில் அதில் டிடி ஒருசில சுவாரஸ்யமான கேள்விகளை கேட்கும் காட்சிகள் உள்ளன

அதில் விக்னேஷ் சிவனுடன் உள்ள உறவு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா? அல்லது திருமணமா? என்றும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், பத்திரிகையாளர்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கவில்லை என்றும், உங்களுக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்து நீங்கள் வாழ்க்கையின் பின்னோக்கி சென்றால் நீங்கள் எதை மாற்றுவீர்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

கடைசி கேள்விக்கு மட்டும் ’இதுவரை நான் யாரிடமும் சொன்னதில்லை ஏனெனில் அது எனக்குள் இருக்கும் ரகசியம்’ என்று நயன்தாரா கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிகிறது. இந்த நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிலையில் நயன்தாராவின் மனதில் மட்டும் இருக்கும் அந்த ரகசியம் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.