முதன்முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா? பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 19 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ’ஜவான்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார் என்பதும் ஆனால் கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா தற்போது ’ஜவான்’ ’இறைவன்’ ‘தி டெஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் 234வது படத்தில் அவர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.