நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,November 01 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

நடிகை நயன்தாராவுக்கு ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நடித்த 'O2’ மற்றும் ’காட்பாதர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ’கோல்ட்’ என்ற மலையாள படத்திலும் ’ஜவான்’ என்ற இந்தி படத்திலும் நடித்தி வருகிறார் என்பதும், ‘கனெக்ட்’ மற்றும் ’இறைவன்’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ’என்றென்றும் காதல்’, ’மனிதன்’ போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் 'விக்ரம்' பட ரகசியத்தை போட்டு உடைத்த மைனா!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மகேஸ்வரி மற்றும் மைனா ஆகிய இருவருமே நடித்து இருந்தனர் என்பதும்

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்கொரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான லீ ஜிஹான்(24) உயிரிழந்துள்ளார்.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எத்தனை காதலர்கள்? எத்தனை திருமணம்? முன்னாள் காதலர் கூறிய திடுக் தகவல்!

 பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவின் முன்னாள் காதலர் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அந்த பேட்டியில் அவர் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முரை திருமணம்

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

நான் தான் பிக்பாஸ்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டி நிகழ்ச்சி: பிரபல நடிகர் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தால் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கலந்து கொண்டாலும் நான் தான் பிக்பாஸ் ஆக இருப்பேன் என்றும் பிரபல நடிகர் மன்சூர் அலிகான்