பூஜையுடன் தொடங்கியது நயன்தாராவின் அடுத்த படம்.. இந்த படத்தில் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,March 19 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்ததே. அதேபோல் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்து வரும் ’இறைவன்’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் உள்பட ஒரு சிலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளன.

இந்த படத்தின் உள்ள ஒரு ஸ்பெஷல் இந்த படம் நயன்தாராவின் 75வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் 75வது படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.