சென்னை எழும்பூரில் திடீரென சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை எழும்பூரில் உள்ள சாலையோர மக்களை திடீரென நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சந்தித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா இன்று சாலையோர மக்களுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பரிசுகளை வழங்கினார். சென்னை எழும்பூர் அருகே உள்ள சாலையோர மக்களிடம் நேரடியாக சென்ற நயன்தாரா, பரிசு பொருட்களை வழங்கினார்.
நயன்தாரா பரிசு பொருட்களை கொண்டு வந்து உள்ளார் என்ற செய்தி அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள சாலையோர மக்கள் அவரிடம் பரிசு பொருளை வாங்க முண்டியடித்ததால் எடுத்ததால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த அனைவருக்கும் பரிசு பொருளை கொடுத்த பின்னர் நயன்தாரா தனது கணவருடன் திரும்பிச் சென்றார். இது குறித்த புகைப்படம் வீடியோவில் இணையங்களில் வைரலாகி வருகிறது.
Nayanthara & @VigneshShivN distributes gifts to road side peoples#Nayanthara #VigneshShivan #NewYear2023 pic.twitter.com/h3X4ewvrRz
— IndiaGlitz - Tamil (@igtamil) January 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments