சாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா? வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலையோர கடை ஒன்றில் நயன்தாரா பேக் வாங்கும்போது பேரம் பேசியதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும், அது மட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சாலையோர கடை ஒன்றில் பேக் வாங்கும் நயன்தாரா, கடைக்காரரிடம் பேரம் பேசுவது போன்ற காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையிலேயே சாலையோர கடைகளில் பேரம் பேசி நயன்தாரா பேக் வாங்கினாரா? அல்லது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெ|றும் காட்சியா? என்பது படம் வெளியான பின்னர்தான் தெரிய வரும்.
Women Will Be Always Women ???? The Way She's Bargaining With The Seller ?? Ayyoo So Cutiee ??#LadySuperStar #Nayanthara @NayantharaU pic.twitter.com/4DsQmLQDDB
— NAYANTHARA FC KERALA (@NayantharaFCK) October 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments