நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.. பூஜை வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்பு திறனாலும் , வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார், இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை A வெங்கடேஷ் மேற்கொள்கிறார். டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜி.மதன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

More News

கிளாஸ்ரூம்ல எதுக்குடா ஜாதி கொண்டு வர்றீங்க.. 'சீரன்' டிரைலர்..!

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், ஆஜித் உள்ளிட்டோர் நடித்த 'சீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.

சாதிவெறியை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்: பத்திரிகையாளர் சந்திப்பில் 'சீரன்' இயக்குனர்..!

நெட்கோ ஸ்டுடியோ சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் M அவர்களின் அசோசியேட்  இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால்,

ஐந்தே படங்கள்.. அட்லிக்கு திறந்தது அம்பானி வீட்டு கதவு..!

ஐந்தே படங்கள் மட்டும் இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது கோலிவுட்

கட்டி அணைத்து ஒரு முத்தம்.. ஆட்டம் பாட்டு கொண்டாட்டம்.. நயனின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது என்பதை பார்த்தோம்.

'தளபதி 68' படத்தின் வில்லன் இந்த பிரபலமா? வேற லெவலில் யோசிக்கும் வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன 'தளபதி 68' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள்