விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தீபாவளி கொண்டாட்டம் : வைரல் வீடியோ
- IndiaGlitz, [Friday,November 05 2021]
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரும் விக்னேஷ் சிவனுடன் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகிறார் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய தீபாவளி தினத்தை நயன்தாரா தனது காதலருடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது:
மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி, அந்த பயிற்சியை தயவு செய்து அனைவரும் தினமும் செய்யுங்கள். மகிழ்ச்சி என்பது பட்டாசுகள் போல வெடிக்கப்படவேண்டும். நாம் நம்முடைய இலக்கை சென்றடைவதற்கான ஒரே வழி எதுவாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நாம் முன்னேற விடாமுயற்சியை செய்ய வேண்டும்.
இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக இருக்க மறக்க வேண்டாம். வாழ்க்கையை கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் நிறைய இருக்கிறது என்பதை நமக்கு இந்த பண்டிகைகள் நினைவு கூறுகின்றன. நம்முடைய வழக்கமான பணிகளில் இருந்து சிறிது நேரம் மகிழ்ச்சிக்காக ஒதுக்கி நல்ல விஷயங்களை பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் ஆக இருப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.