நயன்தாரா அடுத்த படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. விரைவில் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட பணி தொடங்கியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து அறிவிப்போடு புதிய போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த நிலையில் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டுக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் சோலோ ஹீரோயின் கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
ஜி ஸ்டுடியோ மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் பிரவீன் அந்தோணி படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#LadySuperstar75 dubbing begins ✨❤️#Nayanthara #N75 @Nilesh_Krishnaa @sathyaDP @MusicThaman @editorpraveen @Gdurairaj10 @ZeeStudiosSouth @tridentartsoffl @NaadSstudios #Ravindran @Naadsstudios @SETHIJATIN @sanjayragh @Kirubakaran_AKR @TheVinothCj @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/e8mZGRoT7a
— Trident Arts (@tridentartsoffl) September 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com