சிஎஸ்கே மேட்சை பார்க்க வந்த நயன்தாரா.. உடன் யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியை நேரில் பார்த்து ரசிக்க பல திரை உலக மற்றும் அரசியல் பிரபலங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வந்திருந்தது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.
அந்த வகையில் சற்று முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இந்த போட்டியை ரசித்து பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் அருகில் இசையமைப்பாளர் அனிருத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் விசில் போட்டு போட்டியை ரசித்து பார்த்தனர்.
Naangalum #Superfans Dhaan! 🥳#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 @anirudhofficial @VigneshShivN pic.twitter.com/XDbfhz9WRN
— Chennai Super Kings (@ChennaiIPL) May 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com