close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.. வைரல் புகைப்படங்கள்..!

Thursday, October 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கொடைக்கானலில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படம் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி மதன் படத்தொகுப்பு பணியை செய்கிறார்

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளங்கள் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இன்றைய படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்றும் விரைவில் அவர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment