திரையுலகில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? இந்த ஒரே ஒரு காரணம் தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது நீண்டநாள் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் முடிந்ததும் முதல்கட்டமாக தாய்லாந்துக்கு தேனிலவு சென்று வந்த இந்த தம்பதிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் பட தயாரிப்பு பணிகளை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் அதற்கு ஒரே காரணமாக தாலி சென்டிமென்ட் என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்தை முன்னிட்டும் படப்பிடிப்பின்போது தாலியை கழட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் கூட தாலியை கழட்டாமல் தான் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே பல்வேறு கேரக்டரில் நடிக்கும்போது தாலியை கழற்றி வைத்துவிட்டு நடிக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரிப்பார் என்றும் அதன் மூலம் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments