பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய கவர்னர்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,April 18 2018]

நிர்மலாதேவி விவகாரத்தில் தன்னுடைய பெயர் அடிபடுவதை அடுத்து நேற்று மாலை இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நிருபர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு பதிலளித்த கவர்னர், இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர் பெண் நிருபர் ஒருவர் கவர்னரிடம் கேள்வி ஒன்றை கேட்டார். அந்த கேள்விக்கு பதிலளிக்காத கவர்னர், பெண் நிருபரின் கன்னத்தை லேசாக தட்டி, நீங்கள் என் பேத்தி போன்றவர் என்று கூறினார்.

கவர்னரின் இந்த செயலுக்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னுடைய தாத்தா வயதுடையவர் என்றாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் என்னுடைய கன்னத்தில் தட்டியது தவறு. இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் என்னுடைய முகத்தை பலமுறை கழுவிவிட்டேன்  ஆனாலும் அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை என்று அந்த பெண் நிருபர் தனது சமூக வலைத்தளத்தில் ஆத்திரமாக பதிவு செய்துள்ளார்.

பெண் நிருபருக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் ஒருசில மாண்புகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

More News

நிர்மலாதேவியை கைது செய்தது எப்படி?

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த கணித பேராசிரியை நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வந்த 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

நிர்மலாதேவியை நான் நேரில் கூட பார்த்ததில்லை: கவர்னர் பேட்டி

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி

ஆசிபா கொடுமை குறித்து விஜய்சேதுபதி கூறியது என்ன தெரியுமா?

காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமையால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது அதைவிட இந்த கொடூர குற்றவாளிகளுக்கு ஒருசிலர் ஆதரவாக பேசி வருவது அதிர்ச்சியாகவும் அசிங்கமாகவும் உள்ளது.

விக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர், நடிகைகளை நட்சத்திரம் என்று அழைத்தால் அபூர்வமான பிறவி நடிகர்களை துருவ நட்சத்திரம் என்று அழைக்கலாம்.

ரஜினி-கமல் அரசியல்: சிம்புவின் ஆதரவு யாருக்கு?

உலக நாயகன் கமல்ஹாசன் தனி அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.