பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய கவர்னர்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நிர்மலாதேவி விவகாரத்தில் தன்னுடைய பெயர் அடிபடுவதை அடுத்து நேற்று மாலை இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நிருபர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு பதிலளித்த கவர்னர், இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர் பெண் நிருபர் ஒருவர் கவர்னரிடம் கேள்வி ஒன்றை கேட்டார். அந்த கேள்விக்கு பதிலளிக்காத கவர்னர், பெண் நிருபரின் கன்னத்தை லேசாக தட்டி, நீங்கள் என் பேத்தி போன்றவர் என்று கூறினார்.
கவர்னரின் இந்த செயலுக்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னுடைய தாத்தா வயதுடையவர் என்றாலும் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் என்னுடைய கன்னத்தில் தட்டியது தவறு. இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் என்னுடைய முகத்தை பலமுறை கழுவிவிட்டேன் ஆனாலும் அதில் இருந்து என்னால் மீள முடியவில்லை என்று அந்த பெண் நிருபர் தனது சமூக வலைத்தளத்தில் ஆத்திரமாக பதிவு செய்துள்ளார்.
பெண் நிருபருக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வயதானவர்களாக இருந்தாலும் ஒருசில மாண்புகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com