நிர்வாண படம் அனுப்பிய மர்ம நபர்களுக்கு பதிலடி கொடுத்த பனிமலர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் அருவருப்பான வார்த்தைகள், புகைப்படங்கள், கமெண்ட்டுக்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களையே கிட்டத்தட்ட சாக்கடையாக மாறிவிட்டனர். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் பனிமலர் என்பவருக்கு சில மர்ம நபர்கள் ஆண்களின் நிர்வாண படங்களை அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு பதிலடி கொடுத்து நெத்தியடி பதிவு ஒன்றை பனிமலர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை
இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன் (விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது, அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது’ என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த பதிவுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.
ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. (1/3)
— Panimalar Panneerselvam (@PanimalarPs) April 23, 2020
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது. (3/3)
— Panimalar Panneerselvam (@PanimalarPs) April 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments