உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

பாப் இசையுலகில் கொடிகட்டி பறக்கும் உலகப்புகழ் பெற்ற பாடகி லேடிகாகா கடுமையான உடல்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்

உலகப்புகழ் பெற்ற 31 வயது லேடிகாகா இம்மாதம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோவில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடவிருந்தார். இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரியோ இசை நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும், மிகச்சிறந்த மருத்துவர்களின் சிகிச்சையால் வலி தற்போது குறைந்துள்ளதாகவும் லேடிகாகா தெரிவித்துள்ளார்.

More News

இயக்குனர் நலன்குமாரசாமிக்கு நிச்சயதார்த்தம்: நவம்பரில் திருமணம்

விஜய்சேதுபதி, சஞ்சிதா நடித்த 'சூது கவ்வும்' படத்தின் மூலம் இயக்குனர் ஆன நலன்குமாரசாமிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தரராஜன் இயக்கி வரும் திரைப்படம் 'டிக் டிக் டிக்' திரைப்படம் என்று கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது,.

அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்த சத்யராஜ்-ஹிப்ஹாப் ஆதி

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய சத்யஜோதி நிறுவனம் தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தது

பள்ளிப் பருவத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன். கமல்ஹாசன்

பள்ளி பருவத்தை நினைவில் கொண்டு வரும் வகையில் பல திரைப்படங்கள் கோலிவுட் திரையுலகில் உருவாகியுள்ள நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ள மற்றொரு படம் 'பள்ளி பருவத்திலே'.

முதல்ல மெட்ரோ வரட்டும், அப்புறம் புல்லட்டுக்கு போகலாம்: கஸ்தூரி

உலகின் 15 நாடுகளில் புல்லட் ரயில் சேவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இப்போதுதான் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.