உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

பாப் இசையுலகில் கொடிகட்டி பறக்கும் உலகப்புகழ் பெற்ற பாடகி லேடிகாகா கடுமையான உடல்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்

உலகப்புகழ் பெற்ற 31 வயது லேடிகாகா இம்மாதம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோவில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடவிருந்தார். இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரியோ இசை நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும், மிகச்சிறந்த மருத்துவர்களின் சிகிச்சையால் வலி தற்போது குறைந்துள்ளதாகவும் லேடிகாகா தெரிவித்துள்ளார்.