காதலித்து ஏமாற்றிய காதலனின் ஆணுறுப்பை கட் செய்த பெண் டாக்டர்: திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெங்களூரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காதலித்து கைவிட்ட ஆண் டாக்டரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பெண் டாக்டர் அமீனா என்பவர் பல் டாக்டராக அந்த பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இன்னொரு பல் டாக்டரான அர்ஷத் அலி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் சில காலங்கள் ஒன்றாக வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரின் காதலை அர்ஷத் அலியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனையடுத்து தனது காதலியிடம் நாடகமாடிய டாக்டர் அர்ஷத், தனக்கு கேன்சர் இருப்பதாகவும் அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் நாம் பிரிந்துவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் பெண் டாக்டர் அமீனா பெரும் சோகத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் டாக்டர் அர்ஷத் அலி திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்ட பெண் டாக்டர் அமீனா, அர்ஷத் தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டதை அறிந்ததும் அவரை பழிவாங்க திட்டமிட்டார் இருப்பினும் பழிவாங்குதலை மனதில் வைத்துக் கொண்டு அர்ஷத்தையும் அவருடைய மனைவியையும் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார்.
விருந்துக்கு முன்னர் ஜூஸ் குடித்ததாகவும் ஜூஸில் மயக்க மருந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜூஸ் குடித்ததும் இருவரும் மயங்கி விழுந்த நிலையில் தன்னை ஏமாற்றிய டாக்டர் அர்ஷத் அலியின் ஆணுறுப்பை கட் செய்துவிட்டு தப்பி டாக்டர் அமினா தப்பியோடிவிட்டார்.
மயக்கம் தெளிந்ததும் வலியால் துடித்த டாக்டர் அர்ஷத் அலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெண் டாக்டர் அமீனா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments