நள்ளிரவில் சினிமாவுக்கு சென்ற பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது!

பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவருடன் சினிமாவுக்கு சென்று, சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதற்காக அவர் ஷேர் ஆட்டோவில் ஏறினார். அந்த ஷேர் ஆட்டோவில் உள்ள நான்கு பேர்கள் திடீரென வேறு பாதையில் ஆட்டோவை செலுத்தி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன், தங்கச்சங்கிலி, ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு ஏடிஎம் கார்டில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பெண் மருத்துவர் ஆன்லைனில் புகார் அளித்த நிலையில் வேலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 17 வயது சிறுவன் தவிர மற்றவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் மட்டும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் 17 வயது சிறுவனின் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

'வலிமை' படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான 'வலிமை'  திரைப்படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'வலிமை' வசூல் உண்மையாகவே ரூ.200 கோடியா? போனிகபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரி குவித்தது என தகவல் வெளியானது. இந்த படம் 5  நாட்களில் 100 கோடி ரூபாய்

நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு முக்கிய பதவி: ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது என்பதும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணை

அஜித் கேட்டது ரூ.100 கோடி சம்பளம், தயாரிப்பாளர் தந்ததோ ரூ.105 கோடி!

 நடிகர் அஜித் 100 கோடி சம்பளம் கேட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் 105 கோடி தருவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் வெளிவரும் தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? வைரலாகும் "சின்ன தல" யின் கணிப்பு!

சிஎஸ்கே அணி ரசிகர்களால் “சின்னத்தல“ என்று கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாதது