கொரோனாவால் பாதிப்படைந்த பெண் மருத்துவர்: இறக்க போவதை முன்கூட்டியே அறிவித்த அதிசயம்

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் தான் இறக்கப் போவதை முன்கூட்டியே தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர் மனிஷா ஜாதவ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் இறக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்த பெண் மருத்துவர் தனது முகநூல் பக்கத்தில் ’இனி நான் உயிர் பிழைக்கப் போவதில்லை என்றும், அனேகமாக இதுதான் என்னுடைய கடைசி குட்மார்னிங் ஆக இருக்கும் என்றும் பதிவு செய்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஃபேஸ்புக்கில் இனி என்னால் உங்களை சந்திக்க முடியாது என்று நினைக்கிறேன் என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் உடலுக்கு தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை என்றும் ஆத்மா என்றும் நிலையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மரணத்தை 36 மணி நேரத்திற்கு முன் கூட்டியே அறிந்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்த அவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.