பெண் டாக்டர் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
30 வயது பெண் டாக்டர் ஒருவர் உடை மாற்றுவதை ரகசியமாக தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜன் ஆக பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 31ம் தேதி தனது பணியை முடித்துவிட்டு பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த அறையில் ஒரு மொபைல் போன் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த மொபைல் போனை எடுத்துப் பார்த்தபோது அதில் கேமரா ஆன் ஆகி இருந்தது என்பதும் ஆதில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்தது என்றும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் விரைந்து வந்த இது குறித்து விசாரணை செய்து அந்த மொபைல் போனுக்கு சொந்தக்காரரான விஷால் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அந்த மருத்துவமனையின் ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வருவதாக தெரிந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் டாக்டர் ஒருவர் உடை மாற்றுவதை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments