கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

இந்த தலைமுறையின் கலாச்சாரங்களில் ஒன்றாகிய செல்பியால் உயிரிழப்பு உள்பட பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்க முயன்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்

ஆந்திராவை சேர்ந்த 25 வயது பெண் மருத்துவர் ரம்யா. இவர் தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றார். கோவா கடற்கரையில் சில பகுதிகள் அதாவது கடலும் பாறையும் அருகருகே உள்ள பகுதிகள் 'ஆபத்தான பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பகுதிகள் 'நோ செல்பி ஜோன்' ஆகும்.

ஆனால் அந்த ஆபத்தான பகுதியில் ரம்யாவும் அவருடைய நண்பர் ஒருவரும் இணைந்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர். பாறையின் மீது நின்று அவர்கள் செல்பி எடுத்தபோது திடீரென ராட்சச அலை ஒன்று வந்து இருவரையும் இழுத்து கொண்டு சென்றது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். ரம்யாவின் நண்பரை உடனே காப்பாற்றிய மீனவர்களால் ரம்யாவை பிணத்துடன் தான் மீட்க முடிந்தது. செல்பி மோகத்தால் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் உயிரிழப்பு நேர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆபத்தான பகுதியில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.