பெண் டிரைவரை நேரில் பாராட்டிய கனிமொழி எம்பி.. சிறிது நேரத்தில் டிரைவர் டிஸ்மிஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையைச் சேர்ந்த பெண் டிரைவரை கனிமொழி எம்பி நேரில் பாராட்டிய நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண் டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஷர்மிளா என்பவர் டிரைவராக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை வந்த திமுக எம்பி கனிமொழி, ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்தார். அவர் சிறிது நேரம் ஷர்மிளாவிடம் பேசிக் கொண்டு இருந்தார் என்பதும் மற்ற பயணிகளிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி, ‘பெண்களால் எந்த வேலையையும் செய்ய முடியும் என்பதை ஷர்மிளா நிரூபித்துள்ளார் என்றும் ஒரு பெண் பேருந்து டிரைவராக இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றும் தெரிவித்தார். மேலும் அவருடைய பேருந்தில் பயணம் செய்தது தானம் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில் திடீரென அந்த பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவுடன் வாக்குவாதம் செய்து அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிகிறது. கனிமொழி இடம் பாராட்டு பெற்ற சிறிது நேரத்தில் டிரைவர் ஷர்மிளா வேலை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments