தமிழக பாஜகவில் இணைந்த பெண் பைக் ரேசர்: அஜித் ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பாஜகவில் பைக் ரேசர் மற்றும் நடிகை அலிஷா அப்துல்லா இணைந்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்தியாவின் முதல் பெண் பைக் ரேசர் மற்றும் நடிகையுமான அலிஷா அப்துல்லா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அஜித் மற்றும் அலிஷா அப்துல்லா ஆகிய இருவருமே பைக் ரேசர்கள் என்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்கள் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக பாஜகவில் இணைந்ததன் மூலம் அரசியலில் குதித்த அலிஷா அப்துல்லாவுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அலிஷா அப்துல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அண்ணாமலை அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாக பாஜகவில் இணைகிறேன் என்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அலிஷா அப்துல்லாவை பாஜகவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பைக் ரேசர் அலிஷா அப்துல்லா, அதர்வா நடித்த ‘இரும்புக்குதிரைகள்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The right decision with the right people beside me ???? @annamalai_k @BJP4TamilNadu @amarprasadreddy pic.twitter.com/qkFO4uTnIT
— Alisha abdullah (@alishaabdullah) September 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com