பெப்சி-தயாரிப்பாளர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் நலவாரியம்

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும் இடையே சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் காரணமாக பெப்சி தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல சீனியர் திரையுலக பிரபலங்கள் இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை நாளை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 'காலா', 'மெர்சல்' உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று திரையுலகின் அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.