close
Choose your channels

சிவகார்த்திகேயன் - கே.வி.ஆனந்த் இணைவது உண்மையா?

Monday, September 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கோ', 'அயன்', அனேகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், இது முழுக்க முழுக்க ஒரு வதந்தி என்று கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்து நேற்று தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த கே.வி.ஆனந்த், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இந்த வதந்தியை கேட்டு சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, இந்த படத்திற்காக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஹீரோவும் டென்ஷன் ஆகப்போறாறு' என்று கூறியுள்ளார்.

மேலும் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளோ அல்லது டெக்னீஷியன்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறிய கே.வி.ஆனந்த், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது மட்டும் உறுதியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

'ரஜினி முருகன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், பாக்யராஜ் இயக்கும் படத்தில் பிசியாக இருப்பதால், இந்த படத்தை முடித்தபின்னர்தான், அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment