close
Choose your channels

கே.வி.ஆனந்த் மீது 'கவண்' நடிகர்கள் செய்த புகார்

Monday, November 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'கவண்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துவரும் நடிகர்கள் உள்பட பொதுவாக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் நடிப்பவர்களின் ஒரு பொதுவான புகார், ஒரு காட்சியில் நன்றாக நடித்தால் கே.வி.ஆனந்திடம் இருந்து எவ்வித பாராட்டுக்களும் வராது என்பதுதான்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'கவண்' படப்பிடிப்பின்போது மடோனா செபாஸ்டியன் நடித்த ஒரு காட்சிக்கு சுற்றி நின்றிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இவர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்த் அவர்களே கைதட்டி பாராட்டும் அளவுக்கு மடோனேவின் நடிப்பில் என்ன இருந்தது என்பது படம் வெளிவரும்போதுதான் தெரியும்
விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், ஜெகன் உள்பட பலர் நடித்து வரும் 'கவண்' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment