கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'தனி ஒருவன்' ரவி?

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

அனேகன் வெற்றி படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜீத், சிவகார்த்திகேயன், ஆர்யா என பலருடைய பெயர்கள் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிதான் அவருடைய படத்தின் ஹீரோ என்று கூறப்படுகிறது

தனி ஒருவன்' வெற்றியை அடுத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுக்கும் பட்டியலுக்கு மாறிவிட்ட ஜெயம் ரவி, கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' படத்தையும், கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்' படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்த்-ஜெயம் ரவி இணையும் இந்த படம் கோலிவுட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.