குட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் மகன் குட்டித்தல ஆத்விக் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் மனைவி ஷாலினி கலந்துகொண்ட போது அவருடன் குட்டித்தல ஆத்விக் சென்றுள்ளார். அட்டகாசமான உடையில் சொக்க வைக்கும் அழகில் ஆத்விக் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள குட்டித்தலயின் அழகிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா கிஸ் கொடுக்கும் எமோஜியை பதிவு செய்து குட்டித்தல’க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பிறந்த குட்டித்தல ஆத்விக்கின் 6வது பிறந்த நாளை வரும் 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
???????? https://t.co/OcHUzSnPTs
— S J Suryah (@iam_SJSuryah) January 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout