'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை நள்ளிரவு 12 மணி முதல் சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர் என்பதும் தோனியின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பாவனா, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’குட்டி ஸ்டோரி’ பாடலின் தல தோனி வெர்ஷனை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தோனியின் பெருமையை குறிக்கும் வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவற்றில் சில வரிகளை தற்போது பார்ப்போம்.

இவரு வழி தனி வழி, ராஞ்சி சூப்பர் கிங்ஙா சீறி வந்த பாயும் புலி

கிரவுண்ட்ல இவரு நடந்து வந்தா ஃபேன்ஸ் வில் பி கிரேஸி

ஹெலிகாப்டர் ஷாட்டு நண்பா.. ஆல்வேய்ஸ் சரவெடி

டிசைன் டிசைன்னா சிக்சர்... வச்சு செய்வாரு மாப்பி

கீப்பிங் பண்ணா ஸ்டெப்பிங் ஹிட்டு, கேப்டன் ஆனா இப்ப டீமே கெத்து

2007ல்ல அடிச்சாரு ஒரு கப்பு, அதுக்கு அப்புறம் 2011ல்ல ஒரு கப்பு.


 

More News

அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும்

'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்

திருமணமான இரண்டே மாதங்களில் காதல் மனைவி 'செத்துப்போ'என கூறியதை அடுத்து மனம் உடைந்த கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா? டிக்டாக் நிறுவனத்திற்கு சிக்கல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர்