ஐந்து மொழிகளில் உருவாகும் த்ரில் படத்தில் முன்னாள் முதல்வரின் மனைவி!

  • IndiaGlitz, [Friday,September 06 2019]

எஸ்பி ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களிலும் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி ஆவார். இவர் தற்போது ஒருசில வருடங்கள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கும் த்ரில் படம் ஒன்றில் குட்டி ராதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘தமயந்தி’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை நவரசன் என்பவர் இயக்கவுள்ளார்.

அருந்ததி, பாகிமதி போன்ற த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகியதாகவும், ஆனால் அவர் ஏற்கனவே ஒருசில படங்களில் பிசியாக இருப்பதால் குட்டி ராதிகாவை அணுகி கதை கூறியதாகவும், கதையை கேட்டவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் நவரசன் தெரிவித்துள்ளார். 

சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரான ராவ் பகதூர் அரசன் கேரக்டரிலும் அவருடைய மகளாக குட்டி ராதிகாவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜெயம் ரவியின் வெற்றிப்படம்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோமாளி' இந்த படத்திற்கு பின்னர் பல திரைப்படங்கள் வெளிவந்தபோதிலும் நான்காவது

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் எப்போது? தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

இன்று வெளியாக வேண்டிய தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் நீதிமன்ற உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுள்ளது.

சாக்சி கொடுத்த பச்சோந்தி விருது! தூக்கி எறிந்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், போட்டியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையிலான தாக்குதல்,

ஆசிரியர் தினத்தில் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள குசும்பு வீடியோ!

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு

கமல்ஹாசனுக்காக இதை கர்வமாக, கடமையாக செய்கிறேன்: சூர்யா

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.