close
Choose your channels

ஒருவழியாக உறுதியாகிறது 'குற்றப்பரம்பரை'.. இயக்குனர் யார் தெரியுமா?

Tuesday, July 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ என்ற நாவலை படமாக்க இயக்குனர் மையம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா போட்டி போட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த படம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது.

’குற்றப்பரம்பரை’ என்ற நாவலை வெப் தொடராக இயக்க சசிகுமார் முடிவு செய்திருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குனராக மாற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் கனவு திரைப்படமான இந்த படத்தை எடுக்க அவர் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு சில காரணங்களால் உருவாக்க முடியவில்லை. அதேபோல் தேசிய விருது பெற்ற பாலாவும் இந்த கதையை இயக்க முடிவு செய்தார், ஆனால் அவராலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை.

இந்த நிலையில் ’குற்றப்பரம்பரை’ நாவலை மையமாக வைத்து சசிகுமார் அதே டைட்டில் வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment