ரஜினிகாந்த் வீட்டில் 'குற்றம் 23' படக்குழு

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'குற்றம் 23' 'என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று 'குற்றம் 23' படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது அவர்களை அழைத்து மனமாற பாராட்டு தெரிவிக்கும் வழக்கம் உடைய ரஜினிகாந்த், தனது நண்பர்களில் ஒருவரான விஜயகுமாரின் வாரிசு அருண்விஜய்யின் வெற்றியை பாராட்டியதில் வியப்பில்லை என்றே கூறப்படுகிறது. இந்த வெற்றியை அருண்விஜய் தக்க வைத்து கொண்டு தமிழ் சினிமாவின் உயர்ந்த இடத்தை பெற அனைவரும் வாழ்த்துவோம்.