பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை' படம் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தின் பூஜை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி அருகே பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் மணிரத்தினம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பூஜை முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் இந்த படத்தை ட்ராப் ஆகி விட்டதாகவும் கூறப்பட்டது

அதேபோல் ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை இயக்குனர் பாலாவும் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தது. இதனால் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் ’குற்றப்பரம்பரை’ படத்தை பாரதிராஜா இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த படம், திரைப்படமாக உருவாவில்லை என்றும் வெப்சீரிஸ் ஆக உருவாக இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த வெப்சீரிஸ்ஸை வி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி மிக பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும், முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுரேஷ் காமாட்சி சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது