close
Choose your channels

'காக்கா முட்டை' மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' டிரைலர் ரிலீஸ் தேதி

Tuesday, June 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் -வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த 'காக்கா முட்டை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை வென்றது. அதுமட்டுமின்றி இந்த படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்தது. இந்த ஒரே படத்தின் மூலம் இயக்குனர் மணிகண்டன் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டார்.

இந்நிலையில் மணிகண்டன் தனது இரண்டாவது படமான 'குற்றமே தண்டனை' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 30ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது சமூக இணையதளங்களில் வலம் வருகின்றது.

விதார்த், பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரஹ்மான், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவில், அனுசரண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு த்ரில் படம் என்பதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment