'குற்றம் கடிதல்' படத்திற்கு மேலும் ஒரு விருது

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

இயக்குனர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' திரைப்படம் பல விருதுகளை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. பொதுவாக விருது வாங்கும் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்ற நிலையை முதன்முதலில் உடைத்தெறிந்தது தனுஷின் 'காக்கா முட்டை'. இதனை அடுத்து வெளியான 'குற்றம் கடிதல்' திரைப்படமும் வசூலில் சாதனை செய்தது.

உலகின் பல நாடுகளில் பல விருதுகளை பெற்ற 'குற்றம் கடிதல்' படத்திற்கு மேலும் ஒரு விருது தற்போது கிடைத்துள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற 'இந்தியன் பனோரமா விழாவில்' குற்றம் கடிதல்' படத்திற்கு சங்கரதாஸ் ஸ்வாமிகள் விருதும், ஒரு லட்ச ரூபாய் பணமும், சில்வர் மெடலும் கிடைத்துள்ளது.

இந்த விருதை 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா பெற்றுக்கொண்டார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இந்த படம் கற்று கொடுத்ததாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'காக்கா முட்டை', 'குற்றம் கடிதல்' வெற்றியை அடுத்து தமிழில் இதுபோன்று இன்னும் பல படங்கள் உருவாக வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமாக உள்ளது.

More News

ஹீரோவாக மாறிய கமல் மகளின் வில்லன்

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்த அனைவருமே புதுப்புது வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வரும் நிலையில்...

18 வருடங்களுக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கவுதமி?

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'பாபநாசம்' படத்தில் ரீ எண்ட்ரி ஆன நடிகை கவுதமிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக ஆதரவு காரணமாக ....

இன்று மாலை 5 மணிக்கு 'வேதாளம்' பற்றிய முக்கிய தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல் வெளியீடு இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான...

தானாக முளைத்த காட்டு மரம் விஜய்சேதுபதி. ராம் புகழாரம்

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள 'மெல்லிசை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...

ரஜினி-விஜய்-அஜீத். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் யார்?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக முதல்வர் பதவிக்கு தமிழ் திரையுலகினர்கள் தான் அதிகளவு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்...