ஜெய் ஸ்ரீராம்! குஷ்புவின் ராமர்கோவில் டுவீட்டால் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் குஷ்புவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் கண்டனம் தெரிவிது வருகின்றனர்.

முதலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பாராட்டி டுவிட் செய்த நடிகை குஷ்பு, அதன்பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார்

இந்த நிலையில் இன்று அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நிலையில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ராமர் கோவிலுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்ச்சியாக நடிகை குஷ்பு பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களுடன் கூடிய டுவிட்டுக்களை பதிவு செய்து வருவதால் அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று வதந்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் கிட்டத்தட்ட சேர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது குஷ்புவும் பாஜகவில் சேருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த விஜய் பட குழந்தை நட்சத்திரம்

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய ஒரு சில திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

ராமர் திலகமிட்டு பக்தியை வெளிப்படுத்திய தமிழ் நடிகை!

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்வை இன்று உலகமே திரும்பி பார்த்து வருகிறது.

நடிகர் கருணாஸ் உள்பட மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஒரு சில அமைச்சர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியதாகவும்

ஆஹா இதுபுதுசா இல்ல இருக்கு… இணையத்தில் வைரலாகிவரும் “420” “ராகுல்மோடி” பெயர்!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: மாற்றுத்திறனாளி உட்பட கெத்துக்காட்டும் தமிழக மாணவர்கள்!!!

கடந்த 2019, செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப் பட்டுள்ளது.