ஏணி போட்டு தான் ஏறனும்.. தங்கையின் போட்டோஷூட் புகைப்படங்களை கலாய்த்த அக்கா நடிகை..!
- IndiaGlitz, [Saturday,April 27 2024]
நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை அவரது சகோதரி ஜான்வி கபூர் கலாய்த்து போட்ட கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இருவரும் பாலிவுட் திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இருவரும் பிரபலம் என்பதும் இருவருக்கும் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் குஷி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் மட்டும் இன்றி அவரது சகோதரி ஜான்வி கபூரும் கலாய்த்து கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
இந்த குட்டியூண்டு டிரெஸ்ஸில் இத்தனை பாக்கெட்டுகளா? போட்டோஷூட் எடுக்க வேற டிரஸ் இல்லையா? உங்கள் கால்கள் என்ன இவ்வளவு நீளமாக இருக்கிறது போன்ற கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வரும் நிலையில் ஜான்வி கபூர் இந்த பதிவுக்கு ’உங்கள் கால்கள் மீது செல்ல வேண்டுமென்றால் ஏணி தான் வைக்க வேண்டும் போல’ என்று கலாய்த்துள்ளார்.
மேலும் இந்த பதிவுக்கு போனி கபூர் ’எனது ட்ரில்லியன் டாலர் பேபி’ என்றும் பெருமையுடன் கமெண்ட் செய்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.