100 குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்.. திரைப்படம் வெற்றியால் ரூ.1 கோடி உதவித்தொகை அறிவித்த நடிகர்..!
- IndiaGlitz, [Tuesday,September 05 2023]
பிரபல நடிகரின் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எடுத்து 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான திரைப்படம் ’குஷி’. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ’குஷி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, தனக்கு ’குஷி’ திரைப்படத்தில் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அளிக்க இருப்பதாக குறித்து தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் பெற போகும் 100 குடும்பங்களின் தகவல்களை இன்று அவர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவை பாராட்டி வருகின்றனர்.